தெலுங்கு திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் தன்னுடைய சினிமா கேடிரியரில் பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற திரைப்படம் தான் புஷ்பா. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 lஆம் ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய வெற்றினை பெற்ற இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார்.
மேலும் சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடிருந்தார் இவருடைய நடனம் பட்டித் தொட்டி எங்கும் வைரலாக மிகப்பெரிய வெற்றினை கண்டது. இவ்வாறு புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றினை கண்ட நிலையில் அதனுடைய இரண்டாவது பாகம் உருவாவதாக கூறினார்கள்.
அந்த வகையில் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதல் பாகத்தில் நடித்தது போலவே அல்லு அர்ஜுன் ஹீரோவாகவும், பகத் பாஸில் வில்லனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது புஷ்பா 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் அதற்காக பத்து நாட்கள் கால் சீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சாய் பல்லவி நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.