மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இதுதான் இவரின் முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பினாலும், தனது அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அந்த வகையில் தொடர்ந்து இவர் எப்போது தமிழ் திரைபடங்கள் நடிப்பார் என்ற ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தார்கள்.
சொல்லப்போனால் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த தேவா என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தான் தனது கெரியரை தொடங்கினார். பிறகு இதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் பிரேமம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இது பெரிய அளவிலும் ரீச்சை பெற்று தந்தது.
இவ்வாறு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பிறகு நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நானியுடன் ஷ்யாம் சிங்கா ராய் போன்ற பெரிய வெற்றி தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்ததாக ராணாவுடன் நடித்துள்ள விராடா பருவம் என்ற படம் ஜூலை 1ஆம் தேதியனறு திரைக்கு வர இருக்கிறது.
இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இவர் பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது தனது உறவினர் திருமணத்தில் அனைவருடனும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
Aww this One 😭❤ @Sai_Pallavi92 #SaiPallavi pic.twitter.com/d8YGtOSEEJ
— Sai Pallavi™ (@SaipallaviFC) May 9, 2022