முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவி நடிக்கப்போகும் படம் நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது, இந்த படம் சிவகார்த்திகேயனின் 21வது படமாகும்.
சாய்பல்லவி தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த ஓரிரு படங்களில் இவருக்கென்று தனி பெரும் ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் மிகவும் பிரபலமானவர் ஆவார்.
சாய்பல்லவி வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இந்திய மருத்துவராக தகுதி பெற தேர்வினை எழுதினார் அங்கு இவரது ரசிகருடன் செல்பியும் எடுத்துக் கொண்டார், அந்த நேரத்தில் இந்த விஷயம் தான் இணையதளத்தில் ட்ரெண்டாகி சென்று கொண்டிருந்தது.
சிவகார்த்திகேயனும் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து கஷ்டப்பட்டு தனது கடின உழைப்பால் முன்னேறி வந்தவர் ஆவார், இவர் நடித்த டாக்டர் படம் பரவலாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி உள்ள இவர் தற்போது அவரது 21 வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸின் 51வது படத்தின் அப்டேட் சாய்பல்லவி பிறந்த நாளான மே 9ஆம் நாள் அன்று வெளியிடப்பட்டது அதில் சாய்பல்லவி நடிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் அனைவரும் சாய் பல்லவியும் சிவகார்த்திகேயனும் நடித்தால் எப்படி இருக்கும் என்று தற்போது கற்பனை செய்யத் தொடங்கி விட்டனர்.