போறப்போக்கை பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒண்ணுத்தையும் கிழிக்க முடியாது.! திடீரென்று சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் முக்கியமான சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை விலகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சனை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீரியலில் சமீப காலங்களாக அடுத்தடுத்து மூன்று நடிகைகள் கர்ப்பமான நிலையில் தொடரை வந்தியன் ஸ்டோர்ஸ் என மாற்றி மிகவும் பங்கமாக கலாய்த்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மூன்றாவது மருமகளாகவும், கண்ணனின் மனைவியாகவும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காதயத்ரி இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து நான் விலகி விட்டது உண்மைதான் இதற்கு மேல் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை இனி வரும் கதை எனக்கும், என்னுடைய கதாபாத்திரத்திற்கும் ஏற்பதாக இல்லை இந்த பயணத்தில் என்ன ஆதரித்த உங்கள் அனைவருக்கும் நன்றி மேலும் என்னுடைய முடிவை மதித்து ஏற்றுக் கொண்ட விஜய் டிவிக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.

இந்த சீரியலின் ஆரம்ப கட்டத்தில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வைஷாலி தனிகா நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். எனவே இவருக்கு பதிலாக தீபிகா நடித்து வந்த நிலையில் இவருடைய முகத்தில் அதிகமாக முகப்பருக்கள் இருந்ததால் சீரியல் குழுவினர்கள் இவரை சீரியலில் இருந்து நீக்கி விட்டனர்.

pandiyan stores
pandiyan stores

எனவே இவருக்கு பிறகு தான் சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். இவருடைய கதாபாத்திரம் அருமையாக இருந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது இப்படிப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரம் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்கள் நிறைய முறை மாற்றி இருக்கிறார்கள். இப்படி அடிக்கடி கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.