ஒரு சில நடிகர், நடிகைகள் தங்களது திரை வாழ்க்கை மிகவும் சூப்பராக போய்க்கொண்டிருக்கும் நிலையில் எதிர்பாராதவிதமாக அவர்கள் செய்யும் சிறிய தவறினால் தங்களது மொத்த சினிமா கெரியரயும் வீணாக்கி கொள்வார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சதா. இவர் காமெடி புயல் வடிவேலு நடிப்பில் வெளிவந்த எலி திரைப்படத்தில் சதா நடித்திருந்தார்.
ஒரு நடிகை திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது அவர் ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படித் தான் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்.
இவ்வாறு இவர் வடிவேலுவின் திரைப்படத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார் சதா. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயம் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து அந்நியன் திரைப்படத்தில் நடித்து திரையுலகினர்,ரசிகர்கள் என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இவர் சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்ததால் பல விருதுகளும் பெற்றார்.அதோடு இப்படத்தில் இடம்பேற்றிருந்த அண்ட காக்க கொண்ட காரி பாடலும் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு தற்பொழுது பட வாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். இந்நிலையில் சதாவுக்கு தற்போது வரையிலும் 37 வயது கடந்த நிலையிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு சதா இன்னும் எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. எனக்கு ஏற்ற வரை இன்னும் நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.