சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சில கசப்பான விஷயங்களால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது அப்படி பிரபல நடிகை சதா திருமணம் செய்து கொண்டால் சுதந்திரம் பறிபோய்விடும் என தெரிவித்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை தொடர்ந்த படங்களில் நடிக்க வேண்டும் என்றால் அவருடைய வாழ்க்கை துணைவர் அதற்கு பக்க பலமாக இருக்க வேண்டும் அப்படி இருந்து வரும் பலரும் இருக்கிறார்கள்.
மேலும் சினிமாவில் நடிப்பதனால் விவாகரத்து கொடுத்தவர்களும் இருக்கின்றனர். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் அந்நியன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சதா. இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இந்த இரண்டு படங்கலுக்கு பிறகு இவருக்கு சரியான படங்கள் அமையாமல் இருந்து வந்தது இந்நிலையில் காமெடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து எலி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான டார்ச் லைட் என்ற படத்தினை தயாரித்தார் இந்த படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.
இவ்வாறு இவர் என்ன செய்தாலும் தனது இழந்த மார்க்கத்தை பிடிக்க முடியவில்லை இந்நிலையில் 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் இது குறித்து சமீப பேட்டியில் பேசியுள்ளார். அதாவது திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம்.. திருமண பந்தத்தில் புரிதல் ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம்.
திருமணம் செய்து கொண்டால் என்னுடைய ஆசைகளை தொடர முடியாமல் போகலாம் மேலும் பல திருமணங்கள் தோல்வியில் முடிந்து பிரிந்து செல்கின்றனர். அதனால் தான் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என சதா தான் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.