‘ஆத்தங்கர மரமே’ பாடல் பேச்சியா இது.? மாடர்ன் உடையில் கலக்கும் ருத்ராவின் புகைப்படங்கள்..

Ruthra
Ruthra

Actress Rudhra: சினிமாவிற்கு அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்து வருபவர்கள் பலர் உள்ளனர். அப்படி இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே என்ற படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் தான் ருத்ரா என்கின்ற அஸ்வினி நம்பியார்.

கேரளாவைச் சேர்ந்த இவர் நடிகையாகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு 1991ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன் மூலம் தமிழ் திரைவுலகிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். கடைசியாக தமிழில் ஆர்யாவின் ஓரம் போ என்ற படத்தில் நடித்திருந்த இவர் இதனை அடுத்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சில குறுபடங்களிலும் நடித்து வருகிறார்.

அதேபோல் தமிழ் சீரியல்களிலும், மலையாள சீரியல்களிலும் தற்பொழுது வரையிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். முக்கியமாக தமிழில் கிழக்கு சீமையிலே, ராமன் அப்துல்லா, பெரிய தம்பி, கள்ளழகர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மிகவும் பிஸியாக  நடித்து வந்த இவர் சமீப காலங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்தார்.

அப்படி தற்பொழுது மாடர்ன் உடையில் ருத்ரா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆத்தங்கர மரமே பாடலில் பேச்சியம்மா கேரக்டரில் நடித்த நடிகையா இது என கமெண்ட் செய்து வருகின்றனர் இதோ அவருடைய புகைப்படங்கள்.

Ruthra
Ruthra
Ruthra
Ruthra