தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்பை எளிதில் பெற்று விட்டார்.
அந்தவகையில் இவர் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இவருடைய பெயரும் புகழும் அதிகரித்துவிட்டது.
ஆனால் நமது நடிகை இந்த திரைப்படத்தை தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்காமல் போனதன் காரணமாக அதன்பிறகு அவரால் எந்த ஒரு வெற்றியையும் கொண்டாட முடியவில்லை.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் அல்லது ஏதேனும் ஒரு சில திரைப்படத்தில் குத்து பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்ற செயல்களில் மட்டும் ஈடுபட்டிருந்த ராய் லட்சுமி எடையும் கொஞ்சம் கூடி போய்விட்டது.
இந்நிலையில் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்துவிட்டு மிக அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவருடைய அட்டகாசம் இணையத்தில் தாங்க முடியாமல் பல்வேறு ரசிகர்களும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள் மேலும் ராய்லட்சுமி சின்ட்ரெல்லா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ஓரளவு வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து அடுத்த பட வாய்ப்புகளை பெற்றுள்ளார்.
மேலும் நமது நடிகை சமீபத்தில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட விஸ்கி தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது மட்டுமில்லாமல் இந்த பதிவு 25 வயதுக்கு மேலான ரசிகர்களுக்கு மட்டுமே என தத்துவத்துடன் பேசியுள்ளார்.