ஒரே நேரத்தில் 3000 கிளிக்..! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற நடிகை ரோஜாவின் பெயர்..!

roja0

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ஒரு நடிகை என்றால் அது ரோஜா தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை ரஜினி, பிரபு, கார்த்திக் போன்ற பல்வேறு நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் திருமணமான பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலுமாக குறைத்து விட்டது மட்டும் இல்லாமல் தற்பொழுது ஒரு மகன் மற்றும் மகளுக்கு  தாயாக இருக்கிறார்.

என்னதான் நமது நடிகை பிசியாக இருந்தாலும் அவ்வபோது சின்னத்திரையில் மட்டும் அடிக்கடி தலைகாட்டி வருவது வழக்கமாக இருப்பது மட்டுமில்லாமல் இவர் பிரபல அரசியல் கட்சியில் இணைந்து மக்களுக்கு தொண்டு செய்து வருகிறார். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நமது நடிகைக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறையில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் ரோஜா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் விஜயவாடா பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் 3000 போட்டோகிராபர்களை வரவைக்கப்பட்டு இருந்தது அங்கே கூடியிருந்த மேடையில் நடிகை ரோஜா இருந்திருந்தார் அப்பொழுது ஒரே நேரத்தில் டிஜிட்டல் கேமராக்கள் மூலம் 3000 போட்டோக்களை போட்டோகிராபர்கள் எடுத்து உள்ளார்கள்.

roja-01
roja-01

மேலும் ரோஜாவும் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கத்தில் பதிலாக பரவி வருவது மட்டும் இல்லாமல் வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கின்னஸ்  சாதனை புத்தகத்தில் ரோஜாவின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிவந்த தகவலின் படி  ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.