விமான பயணத்தின் போது நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ரோஜா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

roja-1
roja-1

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரோஜா இவர் சினிமாவில் நடித்த  போது பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல்  பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

அந்த வகையில் நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், பிரபுதேவா, விஜயகாந்த் என பல்வேறு நடிகர்களுடன் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்தது மட்டுமில்லாமல் தற்போது பிரபல கட்சியில் அமைச்சராகவும் வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை  திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்தது மட்டுமில்லாமல் அதன் பிறகு அவர் பொது நிகழ்ச்சி மற்றும் ரியாலிட்டி ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார்.

ஆனால் தற்போது அரசியல் வாதியாக இருக்கும் ரோஜா சமீபத்தில் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி செல்வதற்கு விமானத்தின் மூலம் பயணித்து வந்தார். அப்பொழுது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது காரணமாக தரை இறங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு விட்டது.

மேலும் விமானத்தை ஓட்டும் ஓட்டுனர் மிக சிறப்பாக  இந்தப் பிரச்சினையை கையாண்டதன் மூலமாக விபத்திலிருந்து ரோஜா தப்பித்து உள்ளார். மேலும் திருப்பதியில் தரை இறங்க உள்ள விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரோஜா பயணித்த விமானத்தில் இப்படி ஒரு சம்பவம் நேரிட்டது பல்வேறு ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமில்லாமல் இந்த செய்தி சமூக வலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.