மக்களின் குறையை தீர்க்க.. பிரம்மாண்ட வீட்டை கட்டிய நடிகை ரோஜா.? வைரலாகும் புதிய வீடு.!

roja
roja

மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர், நடிகைகள் பலரும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு பிசினஸ், அரசியல் போன்றவற்றில் தன்னை தலைகாட்ட விரும்புகின்றனர் அதில் ஒரு சிலர் வெற்றி அடைகின்றனர். ஒரு சிலர் அதன் மூலம் காணாமல் போயிருக்கின்றனர் அந்த லிஸ்டில் இணைந்துள்ள அவர்தான் நடிகை ரோஜா.

இவர் சினிமா உலகில் முதலில் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தன்னை உயர்த்திக் கொண்டார் குறிப்பாக தமிழில் இவர் ரஜினி, பிரபு, கார்த்தி, சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து தனது மார்க்கெட்டை பரப்பினார். வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த ரோஜாவுக்கு ஒருகட்டத்தில் தமிழை தாண்டி மற்ற மொழிகளான மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் கால்தடம் பதித்து வெற்றிகளை குவித்தார்.

சினிமாவில் நடிப்பதையும் தாண்டி இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார் மேலும் தயாரிப்பாளராகவும் தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் ரோஜா. இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் 2002 ஆம் ஆண்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர் கே செல்வமணி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இப்போ இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் இப்பொழுது சினிமா உலகில் பெரிய அளவு ஈடுபாடு இல்லாமல் அரசியல் பிரவேசம் கண்டுள்ளார். அதிலேயும் தற்பொழுது வெற்றிகளை குவிக்க ஆரம்பித்துள்ளார் இவர் ஆந்திர மாநிலம் நகரி பகுதி அமைச்சராக உள்ளார். அரசியல்வாதியான பிறகு மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார் அந்த வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இந்த வீடு மக்களின் குறைகளை கேட்டறிந்து உதவுவதற்காகவே இந்த வீட்டை அவர் கட்டி உள்ளார் என்ற தகவல்களும் வெளி வருகின்றன.

roja
roja