90 காலகட்டத்தில் தனது சிறந்த நடிப்பு திறமையினாலும், வசீகரமான உடல் அமைப்பினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரோஜா. பொதுவாக நடிகைகள் என்றால் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அவர்களால் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க முடியாது அதே போல் அவர்களுக்கு சொல்லும் அளவிற்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காது.
அந்தவகையில் ரோஜாவும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த செம்பருத்தி திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் ஜோடியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவ்வாறு கலக்கி வந்த இவர் 2002ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்கே செல்வமணி காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதியர்களுக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு சினிமாவில் கலக்கி வந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அரசியலிலும் களமிறங்கினார்.
இவ்வாறு அரசியலில் களம் இறங்கிய பிறகு தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார். தற்பொழுது இவர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் ரோஜா தனது மகன் கவுசின் 15-வது பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடிவுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்த புகைப்படத்தில் ஆர்கே செல்வமணி மற்றும் ரோஜா இவர்களின் மகள் மற்றும் மகன் பிற உறவினர்கள் என பிரமாண்டமாக கொண்டாடி உள்ளார்கள்.
அதன்பிறகு பார்ட்டியும் வைத்துள்ளார் அதில் கவுசின் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஆகியவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.