90களில் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை ரோஜா. இவர் கிளாமரிலும் சரி, குடும்ப காட்சிகளிலும் சரி செம்ம சூப்பராக நடித்து அசத்துபவர். அதனாலையே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். நடிகை ரோஜா முதலில் செம்பருத்தி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்
அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் உச்ச நட்சத்திர நடிகர்களான சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து வெற்றியை கண்டார் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி நடிகை ரோஜா தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வெற்றியை ருசித்தார்.
இதனால் தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து அதிக ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருந்த இவர் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி குடும்பம் மற்றும் மற்றவற்றில் ஆர்வம் காட்டினார் ஒரு வழியாக அரசியலில் தற்பொழுது நல்ல ஒரு இடத்தை பிடித்து சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ரோஜா திருமணம் நடந்த போது பல நண்பர்கள், உறவினர்கள்மற்றும் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர் அவர்களில் ஒருவராக அஜித் மற்றும் ஷாலினி இருவரும் திருமண விழாவிற்கு வந்து விழாவை சிறப்பித்ததோடு மட்டுமல்லாமல் ரோஜாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் எப்படி நீங்கள் நால்வரும் புன்னகையுடன் இருக்கிறார்களோ அதே போல இந்த புகைப்படத்தை பார்த்த எங்களுக்கும் இப்பொழுது மகிழ்ச்சியை கொடுக்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.