47 வயதிலும் கருப்பு நிற டீசர்ட், பிங்க் நிற லெக்கின்ஸ் போட்டுக்கொண்டு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ரோஜா.! காட்டுத்தீ போல் வைரலாகும் வீடியோ

roja-actress
roja-actress

நடிகை ரோஜா இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வந்தார் தற்போது இவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார், இவர் தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது.

செம்பருத்தி திரைப்படத்தை தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை, இந்து, வீரா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், ஒரு காலகட்டத்தில் வயது அதிகரித்ததால் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்பு ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் இவருக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், ரோஜா நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதி, தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல பணிகளை செய்துள்ளார்.

நடிகை ரோஜா அவ்வபொழுது அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார் அந்த வகையில் சமீபத்தில் கூட மகள் அன்ஷி மாலிகாவின் புகைப்படங்களை அப்லோட் செய்தார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரோஜாவுக்கு இவ்வளவு அழகான மகளா என வியந்தார்கள், ரோஜாவின் மகள் தற்பொழுது பள்ளி படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அதனால் அவர் சினிமாவிற்கு வருவதற்கான எண்ணம் தற்போது இல்லை என கூறுகிறார்கள்.

ஆந்திரா அரசியலில் பரபரப்பாக இருக்கும் ரோஜா சமீபத்தில்கட ஆம்புலன்ஸ் ஓட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார், நடிகை ரோஜா சினிமாவில் தான் முன்னேறினார் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் சினிமா சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதோ சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்வது கிடையாது, இதை பார்த்த பலரும் தன்னை வார்த்து விட்ட சினிமா துறைக்கு ரோஜா காட்டும் நன்றிய இது என கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

நடிகை ரோஜா எப்பொழுதும் பரபரப்பாக சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருப்பார் இந்த நிலையில் என்ன தான் அரசியலில் அதிக ஆர்வம் காட்டினாலும் உடல் எடையில் அதிக ஆர்வம் காட்டுபவர் அதனால் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக கவனம் செலுத்தி வருகிறார், இந்த நிலையில் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்துள்ளார் நடிகை ரோஜா.

அதன் வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது, இளம் நடிகைகள் தான் உடற்பயிற்சி செய்து அதிக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள் அவர்களுக்கு போட்டியாக ரோஜாவும் களம் இறங்கிவிட்டார். இனி இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போல இதொ வைரலாகும் வீடியோ.