வசூல் வேட்டையில் இருக்கும் முன்னணி நடிகருடன் ஜோடி சேரப்போகும் நடிகை ரிது வர்மா..! பட டைட்டிலே வித்தியாசமா இருக்கு..!

ritu-varma-1
ritu-varma-1

தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து அவர்தான் நடிகை ரிது வர்மா. இவ்வாறு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவர் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற்று விட்டார்.

அந்த வகையில் தொடர்ந்து தமிழ் திரைப் படங்களில் நடிப்பார் என்று நினைத்த நிலையில் தெலுங்கில் மிக பிஸியாக பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகை என பெயர் வாங்கி விட்டார்.

அந்தவகையில் இவர் தமிழில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படம் அவருக்கு மாபெரும் புகழை உண்டாக்கி தந்தது மட்டுமில்லாமல் தமிழில் இவர் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் பெறுவதற்கும் வழிவகுத்துக் கொடுத்தது.

இந்நிலையில் சமீபத்தில் ரிது வர்மா அவர்கள் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.  அந்த வகையில் இவர்களுடைய நடிப்பில் தற்போது கணம் என்ற திரைப்படம் உருவாக்கி வருகிறது.

sivakarthikeyan-01
sivakarthikeyan-01

இவ்வாறு இந்த திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழுவினர்கள் மிக விரைவில் வெளியிட போவதாக கூறி உள்ளார்கள். இதனால் ரசிகர்கள் முதல்முதலாக சென்சேஷனல் நடிகை உடன் சிவகார்த்திகேயன் ஜோடி சேர்வதற்கு காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.