தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பல நடிகைகள் தங்களது முதல் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த விட்டு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கோலிவுட்டை விட்டு வெளியேறியவர்கள் உள்ளார்கள்.
அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று விட்டால் அந்த நடிகையை தலைமேல் தூக்கிவைத்து ரசிகர்கள், திரை பிரபலங்கள் என்று அனைவரும் இவரை பிரபலமடைய செய்து விடுவார்கள்.
அந்த வகையில் பத்து வருடங்களுக்கு முன்பு நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த யுவன் யுவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகைகள் ரீமா கல்லிங்கல். தமிழில் இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இத்திரைப்படத்திற்கு பிறகு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்தவகையில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இத்திரைப்படன் மூலம் இவர் பிரபலமாகி இருந்தாலும் தமிழில் பெரிதாக சொல்லும் அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே கோலிவுட்டில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
பொதுவாக ஒரு நடிகையை தமிழில் பிரபலம் அடைந்து விட்டால் மற்ற திரைவுலகில் பிரபலம் அடைவது எளிது ஆனால் ரீமா கல்லிங்கலுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் 2013ஆம் ஆண்டு ஆஷிக் அபு என்ற பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்தாமல் தற்போது கேரளாவில் குச்சுப்புடி நடனமாடும் பள்ளி ஒன்றை ஆரம்பித்து தற்போது நடத்தி வருகிறார்.