சிம்பு பட நடிகையா இது!! கணவருடன் ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளாரே!! வைரலாகும் புகைப்படம்..

richa11

தனுஷ் நடிப்பில் வெளிவந்த மயக்கம் என்ன திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யா. இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த ஒஸ்தி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

நடிகை ரிச்சா அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார். அந்த வகையில் 2007ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அமெரிக்கா போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

பிறகுதான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மயக்கம் என்ன திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.  இந்நிலையில் தன்னுடன் படித்த ஜோ லாங்கெல்லா என்பவரை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ரிச்சா திரைப்படங்களில் நடிக்காமல் தனது சொந்த வாழ்க்கையை பார்த்து வருகிறார். இவர் திரைப்படங்களில்  நடிக்கவில்லை என்றாலும் சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் ரிச்சா கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது கணவர் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.அதில் எங்கள் குழந்தை ஜூன் மாதம் உலகை காண உள்ளது.  இந்த மகிழ்ச்சியான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

தற்பொழுது இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.

richa gangopadhia
richa gangopadhia
osthe-actress