ராஜா ராணி 2வில் அவசர அவசரமாக மாற்றப்பட்ட நடிகை.! ரியா கொடுத்த விளக்கம்.. வேறு வழி இல்லாமல் நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட ஆஷா கௌடா

asha-gowda-1
asha-gowda-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் சில மாதங்களாக இரண்டாவது சீசனம் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியல் முதல் பாகத்தில் ஆலியா மானசா சஞ்சீவ் நடித்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் ஆலியா மானசா மற்றும் இவருக்கு ஜோடியாக திருமண புகழ் சித்து அறிமுகமானவர்கள்.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் இந்த சீரியலில் இருந்து விலகினார். இந்த சீரியல் முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் கனவை எப்படி தன்னுடைய கணவர் நிறைவேற்ற வேண்டும் என்பதினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி வகித்து வந்த நிலையில் திடீரென ஆலியா மானசா இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் இவருக்கு பதிலாக ரியா என்ற புதுமுக நடிகை அறிமுகமானார். இவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது இப்படிப்பட்ட நிலை திடீரென தற்பொழுது இவரும் விலகி இருக்கும் நிலையில் இவருக்கு பதிலாக ஜீ தமிழ் சீரியலின் மூலம் பிரபலமான ஆஷா கௌதா சந்தியா கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.

தற்பொழுது எதற்காக ரியா இந்த சீரியலில் இருந்து விலகினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது இது குறித்து ரியா இது தனக்கே தெரியாது என பதிவிட்டு கம்யூனிகேஷன் பிரச்சனை என சீரியல் குழு தெரிவித்ததாக கூறினார். ராஜா ராணி 2 தொடர் பொதுவாக 15ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை ஷூட்டிங் நடைபெறுமாம் எனவே 15 நாட்களும் வெளியூரை சேர்ந்த நடிகைகளும் சென்னையில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு ஷெட்யூல் பின்பற்றப்பட்டு வருகிறது.

asha gowda
asha gowda000000000000000000000000000000000000000

ஆனால் ரியா தன்னுடைய பர்சனல் விஷயங்களுக்காக சூட்டிங் நடைபெறும் தேதியில் வெளியூருக்கு செல்ல உள்ளதாக ஏற்கனவே சீரியல் குழுவிடம் அறிவித்துள்ளார் அப்பொழுது ஒப்புக்கொண்டு சீரியல் குழு பிறகு எபிசோடுகள் கையில் இல்லாத காரணத்தினால் ரியாவை கூறிய சில நாட்களில் மீண்டும் சூட்டிங் வரும்படி கூறியுள்ளனர். எனவே ஃபோனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரை ரீச் செய்ய முடியவில்லை இதன் காரணமாக வேறு வழி இல்லாமல் அவசர அவசரமாக ராஜா ராணி 2 சீரியலில் ஆஷா கௌவுடாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.