சவாலான கதாபாத்திரத்தில் நீண்ட வருடங்கள் கழித்து கதாநாயகியாக களமிறங்கும் நடிகை ரேவதி.!

revathi
revathi

பொதுவாக நடிகைகள் என்றால் குறிப்பிட்ட காலம் வரை மட்டும்தான் சினிமாவில் நடிப்பார்கள் ஆனால் இன்னும் சில நடிகர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வயதாகியும் கூட தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் தான் நடிகை ரேவதி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பட்டியலில் ரேவதி முதல் ஐந்து இடங்களில் இருந்து வருகிறார் மேலும் இவர் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்த வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நீண்ட வருடங்கள் கழித்து கதாநாயகியாக நடிக்கிறார்.

ஆனால் அது பாலிவுட் திரைப்படம் அதாவது பாலிவுட் இயக்குனர் அனிர்பன் போஸ் இயக்கம் ஆயே ஜிந்தகி திரைப்படத்தில் தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் மேலும் இவர் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்கள்.

அதாவது மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் நபரின் உறுப்புகளை தானம் செய்யும் விதமாக இறந்த அந்த நபரின் குடும்பத்தினரிடம் சென்று அந்த இக்கட்டான சூழ்நிலையில் பக்குவமாக பேசி அவர்களை கன்வெர்ட் செய்து உறுப்புகளை தானம் செய்ய சம்பதிக்க வைக்கும் பொறுப்பு வகிக்கும் மருத்துவமனை ஊழியர் கதாபாத்திரத்தில் ரேவதி நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தினை பற்றி இயக்குனர் கூறும் பொழுது நிஜத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளோம் இந்த படத்தில் ரேவதி நடிக்கும் கதாபாத்திரம் சவாலானது தான் என்றாலும் ஏற்கனவே 15 வருடங்களுக்கு முன்பு உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததுடன் தானே முதல் ஆளாக உறுப்புகள் தானம் செய்வதற்காகவும் கையெழுத்து விட்டவர் ரேவதி என்பதால் இந்த கதையை கேட்டவுடன் அவர் நடிக்க ஒப்புக்கொண்டாராம் அதிலேயே எனது மிகப்பெரிய பளு குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.