actress revathi speech viral in social media: தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரை உள்ள நடிகைகள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரேவதி இவருடைய உண்மையான பெயர் என்ன வென்றால் ஆஷா. நமது நடிகை கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ் சினிமாவில் என்றும் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
அந்த வகையில் இவர் தமிழில் முதன்முதலாக மண்வாசனை என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை காட்டிய நடிகை ரேவதி தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 1988ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நமது நடிகை அதன்பிறகு திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து வெகுநாளாக ஓய்வு எடுத்து விட்டார். ஆனால் 27 வருடங்கள் ஆகியும் நடிகை ரேவதிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிலையில் நடிகை ரேவதி பேட்டி ஒன்றில் பேசிய பொழுது திருமண வாழ்க்கை பற்றி பேசி உள்ளார் அப்போது எனக்கு 17 வயது ஆகும் போது நான் சினிமாவிற்குள் வந்தேன் அதே போல தன்னுடைய இருபதாவது வயதில் திருமணம் செய்து கொண்டேன் அப்படி நான் அவசரப்பட்டது மிகவும் தவறான செயல் என்பதை கருதி என்று நான் வருத்தப்படுகிறேன்.
இந்நிலையில் நடிகை ரேவதி கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தார் அப்போது அவருக்கு 52 வயது ஆகிவிட்டது அப்படி என்றால் 47 வயதிலேயே ரேவதி குழந்தை பிறந்திருக்கும் இவ்வாறு கணவன் மனைவி இருவரும் விவாகரத்து பெற்ற பின் இவர் எப்படி மகள்என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகமாகிவிட்டன.
இந்நிலையில் அதற்கு விளக்கம் அளித்த ரேவதி நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் குழந்தை பெற்றுக் கொண்டேன் என நடிகை ரேவதி கூறியுள்ளார்.