வெறும் ஐந்து நாள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரேவதி.! மெகா ஹிட் திரைப்படமாக மாற்றிய இயக்குனர் பாண்டிராஜ்.

revathi

80-90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த் என பலருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.  தற்பொழுது நயன்தாரா எப்படி பிசியாக இருக்கிறாரோ அதே போல இவரும் இவர் நடித்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக மிகவும் பிஸியாக இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.எனவே சில திரைப்படங்களில் மாற்றி மாற்றி நடித்து வந்துள்ளார். அந்த நேரத்தில் பாண்டியராஜ் நடிகை ரேவதியிடம் நான் இயக்கும் திரைப் படங்களில் நடியுங்கள் என்று கேட்டுள்ளார்.

ஆனால் ரேவதி முடியாது என்று மறுத்து விட்டாராம்.ஒருவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அதற்கு கால்ஷீட் மிகவும் அவசியம். ஆனால் ரேவதியிடம் ஒருசில கால்ஷீட் மட்டும் வைத்திருந்தாராம். எனவே என்னிடம் கால்ஷீட் இல்லை என்று பாண்டியராஜிடம் கூறிவிட்டார்.

ஆனால் பாண்டியராஜ் தொடர்ந்து ரேவதியை கேட்டு வந்துள்ளார். அதன் பிறகு முதலில் நீங்கள் கதையை கேளுங்கள் அதன்பிறகு கால்சீட் பிரச்சினையை பார்த்துக் கொள்ளலாம் என்று பாண்டியராஜ் ரேவதியிடம் கூற பாண்டியராஜ் கதை சொன்னதும் ரேவதிக்கு மிகவும் பிடித்து விட்டதாம் எனவே தன்னிடமிருந்த ஐந்து கால் சீட்டுகளை கொடுத்துவிட்டார்.

அதன்பிறகு ரேவதி பாண்டியராஜிடம் இந்த ஐந்து நாட்களில் இத்திரைப்படத்தை உங்களால் முடிந்த வரை எடுத்து விடுங்கள் என்று கூறினாராம். அந்த வகையில் ஐந்து நாட்களில் நடித்து முடித்து கொடுத்தாராம் ரேவதி. அந்த திரைப்படம்தான் ஆண்பாவம் இத்திரைப்படத்தில் பாண்டியன், பாண்டியராஜ், சீதா, விகே ராமசாமி,ரேவதி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் 1985ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.

அதோடு முக்கியமாக இத்திரைப்படம் 150 நாட்களுக்கும் மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.இத்திரைப்படம் ரேவதிக்கு  சினிமா வாழ்க்கை ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.

aanpavam
aanpavam