விவாகரத்துக்குப் பின் 47 வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை ரேவதி..! எதற்காக தெரியுமா..?

revathi-1

ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி இவர் கேரளாவை பூர்விகமாகக் கொண்டது மட்டுமில்லாமல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்தார்.

இவர் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக அதன் பிறகு திரையில் முன்னணி நடிகராக வலம் வந்த ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என அனைவருடைய திரைப்படத்திலும் அவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்ததுமட்டுமில்லாமல் ஒரு நேரத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத் திரைப் படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பொதுவாக திரையுலக பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வதும் பின்னர் விவாகரத்து செய்து கொள்வதும் வழக்கம் தான் அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இருபத்தி ஏழு வருடமாக குழந்தை இல்லாத காரணத்தினால் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரேவதி தன்னுடைய 47 வயதில் டெஸ்ட் டியூப் பேபி மூலமாக  குழந்தை பெற்றுள்ளார். தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்கும் ரேவதி பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளானதன் காரணமாக தான் இப்படிப்பட்ட செயலை செய்துள்ளாராம்.

revathi daughter-1
revathi daughter-1

அதுமட்டுமில்லாமல் ஒரு பெண் எப்பொழுது தாய்மை அடைகிறாரோ அப்போதுதான் அவள் முழுமை அடைகிறாள் இதன் காரணமாக தான் நான் குழந்தை பெற்றுக் கொண்டேன் அதுமட்டுமல்லாமல் இது என்னுடைய ஆசை என்று கூறியது மட்டுமல்லாமல் தற்போது அவருடைய குழந்தைக்கு எட்டு வயது ஆகிறது மேலும் அவருக்கு மகி என பெயர் வைத்துள்ளார்.