நல்லா இருந்த உதடை பிதுங்கிப் போன பெரிய உதடாக மாற்ற சர்ஜரி செய்துக் கொண்டாரா பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா.? அவரே கூறிய தகவல் இதோ..

reshma
reshma

வெள்ளித்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் அறிமுகமாகி இருப்பவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்பு தொடர்ந்து திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த நிலையில் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. அப்படி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா புருஷன் என்ற கேரக்டரில் நடித்து படித்தொட்டி எயங்கும் பிரபலமானார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் தனது பர்சனல் வாழ்வில் நடந்த ஏராளமான தகவல்களை பகிர்ந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்த இவர் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இவர் படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது இவருடைய உதடு மிகவும் நார்மலாக இருந்தது.

ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து உதடு பெரிதாக காணப்படுகிறது. எனவே பலரும் இவரை விமர்சனம் செய்து வருகிறார்கள் எனவே சமீபத்தில் தான் குண்டாக மாறியதால் நெட்டிசன்கள் பலரும் தன்னை பற்றி மோசமாக விமர்சிப்பது குறித்து பேசி உள்ளார். அவர், தன்னை விமர்சிப்பவர்களுக்கு என் உடலில் இருக்கும் மெடிக்கல் பிரச்சனைகள் பற்றி தெரிவதில்லை என்றார்.

மேலும் ஏராளமானவர்கள் கமெண்டில் உதடு பெரிதாக நான் சர்ச்சரி செய்து கொண்டேன் என்றும் கூறி வருகிறார்கள். அப்படி செய்திருந்தாலும் அது என் விருப்பம் எனக்கு பிடித்ததை செய்கிறேன் உங்களுக்கு என்ன கஷ்டம் எனவும் கேட்டுக் கொண்டார்.