எனக்கு இந்த மாதிரி பசங்கள தான் ரொம்ப பிடிக்கும் ரெஜினா ஒரே போடு.! என்னப்பா இப்படி சொல்லிட்டாங்க கவலையில் ரசிகர்கள்

rejina

எப்பொழுது லாக் டவுன் என்ற ஒன்று ஆரம்பித்ததோ அதில் இருந்து நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது போன்றவற்றை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அப்படி ரசிகர்களிடம் லைவ் சேட்டில்  பேசும் நடிகைகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ரெஜினா கேஸன்ட்ரா. இவர் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரபலமடைந்து இருந்தாலும் சொல்லுமளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதன் பிறகு தமிழிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக மாநகரம் என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர்.  தற்போது இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது கொரோனா காரணத்தினால் அனைத்து தொழில்களும் மூடப்பட்டுள்ளது. எனவே படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை இப்படிப்பட்ட நிலையில் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து ரசிகர்களிடம் பேசுவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

rejia 1
rejia 1

அந்த வகையில் ரேஜினாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்படிப்பட்ட பையனை பிடிக்கும் என்று கேட்டதற்கு ஈகோ இருக்கும் பையனை எனக்கு சுத்தமாக பிடிக்காது நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் அந்த பையனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.