நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா..? இணையத்தில் வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

rema-sen-01

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் மட்டும் என்றே பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைத்து நடித்த ஒரு நடிகை தான் ரீமாசென் இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதல் முதலாக கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்பை பெற்ற நமது நடிகை ரீமாசென் அவர்கள் அதன் பிறகு தளபதி விஜயின் பகவதி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து விஷாலின் செல்லமே என்ற திரைப்படத்திலும் அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கூட சமீபத்தில் எடுக்க வேண்டும் என செல்வராகவன் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்திக்  கதாபாத்திரத்தில் தற்பொழுது தனுஷ் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க நமது நாயகி பிரபல தொழிலதிபர் ஷூவ்கரன்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ருத்ர வீர் என்ற மகனுக்கு தாயான நடிகை ரீமாசென் அவர்கள் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவது வழக்கமான செயல் தான்.

reema sen-2
reema sen-2

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய மகனுடன் நமது நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள் ஏனெனில் சிறு வயதில் அவரை பார்த்த பொழுது  மிகவும் குழந்தை போன்று காணப்பட்ட அவருடைய மகன் தற்பொழுது வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

reema sen-2