வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து ஒரு கட்டத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகியவர்கள் பலர் உள்ளார்கள் மேலும் இதனை அடுத்து ஒரு சில பேருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலில் தொடங்க ஆரம்பித்து விடுகின்றனர்.
அந்த வகையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தற்பொழுது நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் விஜய் டிவியின் புதிய சீரியலுக்கு பிரபல நடிகை அறிமுகமாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அசோகன் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு முரளி மற்றும் வடிவேலு ஆகியோர்களின் கூட்டணியில் காமெடி கலாட்டா நிறைந்த படமாக வெளிவந்த திரைப்படம் தான் சுந்தரா ட்ராவல்ஸ்.
ஒரே ஒரு பஸ்சை வைத்து இந்த படத்தின் முழு கதையும் இயக்கி இருந்தார்கள் மேலும் அந்த படத்தில் முரளி மற்றும் வடிவேலு கூட்டணி அட்டகாசமாக இருந்தது. அந்த வகையில் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி திரைப்படங்களில் ஒன்றாக திகழ்ந்த நிலையில் இந்த படத்தில் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ராதா.
இந்தப் படத்தில் குறத்தியாக இருக்க பிறகு குளித்தவுடன் மிகவும் அழகாக இருப்பதை பார்த்து முரளி, வடிவேலு ஆச்சரியப்படுவார்கள். இவ்வாறு தன்னுடைய முதல் படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இவர் தொடர்ந்து கேம், அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்
இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார். இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் அதுவும் தற்போது சின்னத் திரையில் அறிமுகமாக இருக்கும் சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் சமீபத்தில் முடிந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலின் இரண்டாவது பாகம் புதிதாக அறிமுகமாகியுள்ள நிலையில் இந்த சீரியலில் வில்லியாக நடித்துள்ளார்.