தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் நடிகை ரஷ்மிகா மந்தன்னா தமிழிலும் தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கி வருகிறார் மேலும் திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வாரிசு திரைப்படத்தின் அப்டேட் தீபாவளி அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவர்கொண்டா உடன் ரகசிய காதல் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டார் நடிகை ரஷ்மிகா மந்தன்னா. அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரமாண்ட ஹோட்டலில் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் நடிகை ராஸ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவர்கொண்டா ஆகிய இருவரும் ஜோடியாக மாலத்தீவிற்கு செல்கின்றனர் விமான நிலையத்தின் வெளியே இவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் காதலித்து வருவது உண்மை என்பதற்கு இது ஒரு அடையாளமாக மாறிவிட்டது. நடிகர் விஜய் தேவர்கொண்டா சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் விஜய் தேவர் கொண்டா தற்போது ராஸ்மிகா மந்தானவுடன் மாலத்தீவிற்கு சென்று உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.
