இப்படியும் ஒரு ரசிகரா!! இந்த அளவுக்கு போவாங்களா!! ஆனந்தக் கண்ணீரில் வருந்தி வேண்டுகோள் விடுத்த ராஷ்மிகா மந்தனா!! வைரலாகும் பதிவு…

rashmika mondhana 2
rashmika mondhana 2

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். அதன்பிறகு ரசிகர்களும் இவர் எப்பொழுது தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்த்து வந்தார்கள்.

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற சுல்தான் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.

அதோடு எக்ஸ்பிரஷன் குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவ்வாறு இளைஞர்கள் மனதை கவர்ந்துள்ள இவருக்கு தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்களை கொண்டுள்ளார்.இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர் ஒருவர் ராஷ்மிகா மந்தனாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முடிவெடுத்து உள்ளார்.

அந்த வகையில் 800 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டுள்ளார் இருந்தாலும் ராஷ்மிகா மந்தனாவின் வீட்டினை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் பலரிடமும் அவரது வீட்டின் விசாலத்தை கேட்டு விசாரித்துள்ளார் ஆனால் சந்தேகம் அடைந்த சிலர் இதனைக் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் குடகு மாவட்டத்தில் தற்பொழுது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே அந்த ரசிகருக்கு அறிவுரை கூறி தெலுங்கானாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்கள்.

இதனை அறிந்த ராஷ்மிகா மந்தனா தற்பொழுது மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதாக கூறி அந்த ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது என்னை காண்பதற்காக வெகுதூரம் பயணித்து வந்து எனது வீட்டிற்கு சென்றீர்கள்.

rashmika mondhana 1
rashmika mondhana 1

தயவு செய்து இனிமேல் இதுபோன்று செய்ய வேண்டாம் உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது இருப்பினும் ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதோடு உங்கள் இடத்திலிருந்தே அன்பு செலுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.