தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் அனைத்து துறைகளும் மூடப்பட்டு பல கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் சோஷியல் மீடியாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகைகளும் எப்பொழுது முதல் லாக் டவுன் ஆரம்பித்ததோ அதிலிருந்து கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சாட்டிங் பேசிக்கொள்வது தனது குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடுவது என பலவற்றையும் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் குழந்தைப்பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது தமிழிலும் நடித்துள்ளவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர்தான் தற்போது தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டு கோரோனோ நம்மைவிட்டு எப்பொழுது போகும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறி தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். அந்த வகையில் விஜய் தேவர்கொண்டானுடன் இணைந்து நடித்திருந்த கீதாகோவிந்தம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வகையில் இத்திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் எப்பொழுது தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து வந்தார்கள்.அந்த வகையில் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரை படத்தில் கிராமத்து பெண்ணாக மாறி மிகவும் அட்டகாசமாக நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டு கிடைத்தது.
இப்படிப்பட்ட நிலையில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்றவற்றை செய்து வருகிறார்.