இனி ஹைகிளாஸ் தான் விஜய், சூர்யாவை ஓரம்கட்டிய ரஷ்மிகா.! தாங்கமுடிலடா சாமி என கூறும் ரசிகர்கள்

rashmika-mandhana-01
rashmika-mandhana-01

ஏராளமான நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தங்களுக்கென எளிதி ஒரு இடத்தை பிடித்தவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் இளம் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து கலக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ராஷ்மிகா மந்தனா புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.அதன்பிறகு சமீபகாலமாக தான்  தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா மூன்று திரைப்படங்களின் வாய்ப்பை கால்சீட் பிரச்சனையினால் அவரால் நடிக்க முடியாமல் போயுள்ளது.

அதாவது முன்னணி நடிகைகளான நானி, சாய்பல்லவி மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர்களின் கூட்டணியில் வெளிவந்த ஷியாம் சிங்க ராய்.  இந்தத் திரைப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடித்து  இருந்தார்கள் அதில் ஒரு ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா மற்றொன்று சாய் பல்லவி தான் முதலில் தேர்ந்தெடுத்து இருந்தார்களாம்.ஆனால் ராஷ்மிகா மந்தனாவால் இதில் நடிக்க முடியாமல் போயுள்ளது.

இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய வாய்ப்பான தளபதி 65 திரைப்படம் பீஸ்ட் திரைப்படத்தில் முதலில் ராஷ்மிகா மந்தனாவை தான் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். ராஷ்மிகா மந்தனா அந்த நேரத்தில் பல படங்களில் நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது அதன்பிறகு தான் பூஜைக்கு இந்த வாய்ப்பு சென்றுள்ளது.

மூன்றாவது வாய்ப்பான பாக்யராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் நடிப்பில் உருவாகி உள்ளது திரைப்படம் துணைவன் . இதில்  பிரியங்கா அருள்க்கு பதிலாக முதலில் ராஷ்மிகா மந்தனா தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  பிறகு ராஷ்மிகா மந்தனா நடிக்க முடியாது என மறுத்தால் தான் பிரியங்கா அருளிற்கு இந்த வாய்ப்பை சென்றுள்ளது.இவ்வாறு இந்த மூன்று திரைப்படங்களில் வாய்ப்பையும் ராஷ்மிகா மந்தனா தவிர விட்டுள்ளார்.