நடிகர் விஜய்க்கு எப்படி இளைஞர்கள் மத்தியில் இவருக்கென்று ஒரு மவுசு இருக்கிறதோ அதேபோல சினிமாவில் உள்ள பல நடிகைகளும் விஜய்யின் ரசிகைகளாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகை தான் ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அந்த வகையில் விஜயை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்க என்று ரசிகர் ஒருவர் ஒருவர் கேட்க அதற்கு ராஷ்மிகா மந்தனா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பதிலை அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் விஜய் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது. முன்பெல்லாம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக சில திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளது. ஆனால் தற்போதெல்லாம் தொடர்ந்து எந்த கலவை விமர்சனமும் இல்லாமல் வெற்றியை பெற்று வருகிறது.
அந்தவகையில் கடைசியாக இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது .இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இத்திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்து அமோக வெற்றியை பெற்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு, டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் ஆகியோரு நடித்து வருகிறார்கள்.
இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற முடிந்தது இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் செட் போட்டு இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் ஒன்றுக்கு பூஜா ஹெக்டே மற்றும் விஜய் ஆகியோர்கள் நடனமாட உள்ளார்கள் சமீப நாட்களாக திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது உள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் ரசிகர்களிடம் தொடர்ந்து லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் ரசிகர்களும் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடிகர், நடிகைகள் இடமும் பல கேள்விகளைக் கேட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் ரசிகர்கள் கேள்விக்கு சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார்.ரசிகர் ஒருவர் தளபதி விஜயை குறித்து ஒரே வார்த்தை சொல்லும் படி கேட்டுள்ளார். அதற்கு ராஷ்மிகா மந்தனா லவ் என்ற பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.