தெலுங்கு முன்னணி நடிகருடன் ஜோடி போடுவதற்கு போட்டி போட்டுக் கொள்ளும் பூஜா ஹெக்டே மற்றும் ரஷ்மிகா மந்தனா.!

actress 2
actress 2

சமீப காலங்களாக மற்ற திரைவுலகிலிருந்து தமிழ் திரைவுலகிற்கு தொடர்ந்து ஏராளமான இளம் நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். தமிழ் ரசிகர்களும் மற்ற திரைவுலகில் இருந்து வரும் நடிகைகளுக்கு தங்களது நல்ல ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் இருந்து அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா.

இருவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது எனவே தொடர்ந்து இவர்கள் தமிழிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். இதில் முக்கியமாக பூஜா ஹெக்டே முகமூடி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் தமிழ் சினிமாவில் இவரின் நடிப்பு பெரிதாக பிரபலமடைந்த காரணத்தினால் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார்.

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த நடிகைகள் இருவரும் ஒரு முன்னணி நடிகருடன் நடிப்பதற்காக போட்டு போட்டுக் கொள்கிறார்கள் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தெலுங்கு திரைவுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கொரட்டால் சிவா. இவர் இயக்கத்தில் சமீபத்தில் ஆச்சார்யா படம் வெளிவந்தது இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர்  நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

எனவே இதனைப் பற்றி இயக்குனர் கொரட்டலா சிவா எனது அடுத்த படத்தில் என்டிஆர் நடிக்க இருப்பதாகவும் இவருக்கு ஜோடியாக முதலில் நடிகை ஆலியா பட் நடிக்க இருந்ததாகவும் ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை எனவே தற்போது ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே மிகவும் போட்டுக்கொள்கிறார்கள். இவ்வாறு இவர்கள் போட்டுக் கொள்வதற்கு காரணம் இது pan-india படமாக வரை இருக்கிறது. அதிகபட்சம் ராஷ்மிகா இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.