தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவர் கொண்டவனுடன் இணைந்து கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. அதேபோல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்ற நிலைகள் ராஷ்மிகா மந்தனா எப்பொழுது தமிழ் சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்தார்கள்.
அந்த வகையில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் மேலும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.
இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது நடிகர் விஜய் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான சீதாராமம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றவர் ராஷ்மிகா மந்தானா. இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்வீர் கபருடன் அனிமல் ஆகிய திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மும்பையில் உள்ள கோவில் ஒன்றிற்கு சென்றுள்ளார் இவர் அங்கு வருகிறார் என்று தகவலை அறிந்து கொண்ட ரசிகர்கள் ஏராளமான ஒரு கோவிலுக்கு எதிரில் கூடியுள்ளனர் ராஷ்மிகா கோவிலை விட்டு வெளியே வந்த பொழுது ரசிகர்கள் அவரை போக விடாமல் சூழ்ந்துள்ளனர். மேலும் போலீசார்களின் உதவியுடன் பிறகு ரஷ்மிகா மந்தனா வெளியேறி உள்ளார் மாடன் உடையில் வந்து இவ்வாறு ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி தவித்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.