சமந்தா,தமன்னா என அனைவரையும் ஓரம் கட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா.!

samantha-rashmika
samantha-rashmika

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா இவருக்கும் முன்பு சினிமாவில் முன்னணி நடிகைகளாக கலக்கி வந்த சமந்தா, காஜல் அகர்வால்,பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோர்களை ஓவர் டேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதாவது இன்ஸ்டாகிராமில் அதிகம் ஃபாலோசர்களை கொண்ட நடிகை பட்டியலில் அனைத்து முன்னணி நடிகைகளையும் ஓவர் டே செய்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா சமீப காலங்களாக தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் மேலும் அனைத்து முன்னணி நடிகைகளும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் மில்லியன் கணக்கில் தங்களுக்கு என ரசிகர்களை உருவாக்கியுள்ளார்கள். இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் அதிகம் பாலோசர்களை வைத்திருக்கும் தென்னிந்திய நடிகை என்கின்ற பெருமைக்காக ராஷ்மிகா மாந்தனா பெற்றுள்ளார்.

அவருக்கு இன்ஸ்டாகிராமில் 32.7 மில்லியன் பாலோசர்கள். ராஸ்மிகாவிற்கு பிறகு நடிகை சமந்தா தான் அதிக ஃபாலோசர்கள் வைத்துள்ளார். மேலும் 24.3மில்லியன் பேர் பின்பற்றி வருகிறார்கள் இவ்வாறு சமந்தாவை ராஷ்மிகா மந்தனா முந்தி உள்ளார் என்ற தகவல் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு பொதுவாக இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா மந்தனா, சமந்தா அவர்களுக்குப் பிறகு காஜல் அகர்வால் தான் அதிக பாலோசர்கள் இருந்து வருகிறார்கள்.

காஜல் 23.4 மில்லியன் பேர் பாலோ செய்து வருகிறார்கள் காஜலைத் தொடர்ந்து ராகுல் பிரதீப் சிங் அவர்களுக்கு 22.2 மில்லியன் பாலோசர்கள் உள்ளனர்.இவ்வாறு இன்ஸ்டாகிராமில் அதிகம் பாலோசர்களை வைத்திருக்கும் டாப் எட்டு தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் கடைசி இடத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து பூஜா ஹெக்டே ஐந்தாவது இடத்தினையும், ஸ்ருதிஹாசன் ஆறாவது இடத்திலையும், தமன்னா ஏழாவது இடத்திலையும் பிடித்துள்ளார்கள்.