தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா பல திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் மேலும் இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு, கன்னடா போன்ற திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த இவர் பிறகு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார்.
இதற்கு முன்பு விஜய் தேவரகொண்டானுடன் இணைந்த இவர் நடித்திருந்த கீதா கோவிந்தா, டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இதனை அடுத்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசான விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார் ராஷ்மிகா மந்தனா.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தென்னிந்திய திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஹிந்தி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்த வருவதால் இவர் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்களும் வெளியாகி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
அப்படி இவர் விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறியதோடு மட்டுமல்லாமல் இவர்கள் காதலித்து வருவதாகவும் வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர் ஹீரோக்கள் அளவிற்கு தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படும் நிலையில் இதனை தெரிந்துக் கொண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது ராஷ்மிகா மந்தனா ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது. நடிகை ராஸ்மிகா மந்தனா சமீப பேட்டி ஒன்றில் தற்பொழுது பணம் இருந்தாலும் தான் சின்ன வயதாக இருக்கும்பொழுது வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் தன்னுடைய தந்தை கஷ்டப்பட்டு வந்ததாக கூறியிருந்தார்.