விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.இந்த திரைப்படத்தில் இருந்து தமிழ் ரசிகர்கள் எப்பொழுது ராஷ்மிகா மந்தனா தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என்று மிகவும் ஆவலாக காத்து வந்தனர்.
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ராஷ்மிகா மந்தனா கார்த்திக்குடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக தன சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இன்ப அதிர்ச்சி அளித்து இருந்தார். தற்பொழுது நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற தமிழ் முன்னணி நடிகைகளுக்கு எவ்வளவு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறதோ அதே போல் ராஷ்மிகா மந்தனாவிற்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
அதோடு தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா தமிழிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவரும் ராஷ்மிகா தற்போது இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகிவுள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக நடிகர்,நடிகைகள் விளம்பரங்களில் நடிப்பது இயல்பான ஒன்றுதான் இது காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ராஷ்மிகாவும் சமீபத்தில் நடிகர் விக்கி கௌஷளினுடன் இணைந்து உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதாவது அந்த விளம்பரத்தில் ராஷ்மிகா மந்தனா யோகா டீச்சராக பணியாற்றுவது போலவும் அவ்வபொழுது விக்கி கௌஷ்லின் உள்ளாடையை பார்த்து கவரப்படுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக இருந்து கொண்டு இப்படி நடிப்பது மிகவும் அதிர்ச்சி அடைய ஒன்றாக அமைந்துள்ளது என்றும் இன்னும் பல கமெண்டுகளை தெரிவித்து ராஷ்மிகா மந்தனா மேல் கோபம் அடைந்து வருகிறார்கள்.