படத்தில் நடிப்பதற்கு முன்பு ராஷ்மிகா மந்தனா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!! இதுவரை பார்த்திராத வீடியோ.

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் கன்னட திரையுலகின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கன்னட சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார் பிறகு இவரின் நடிப்பு திறமை நாள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. தற்பொழுது பல மொழி திரைப்படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

பிறகு இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் எனவே இவர் எப்பொழுது தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்து வந்தார்கள் அந்த வகையில் இதனை நிறைவேற்றும் வகையில் தற்போது கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது உள்ள இளைஞர்களின் ஃரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு எக்ஸ்பிரஷன் குயின் என்ற பெயருடன் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகை ராஷ்மிகா வின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பிரபலங்கள் என்று அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் இயக்குனர் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் முதல் முறையில் ராஷ்மிகா மந்தனா ஆடிஷனுக்கு சென்ற போது எடுத்த வீடியோ. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.