தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது ‘குட் பை’ படத்தில் நடித்து முடித்து உள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் ராஷ்மிகா மந்தனாவும் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ளும் நிலையில் சமீபத்தில் ரசிகர்களும் சாமி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமா மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு தென்னிந்திய சினிமாவில் தான் ரசிகர்களும் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்பொழுது முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டனுக்கு ஜோடியாக நடித்தார் இந்த திரைப்படம் தான் இவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தமிழில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார் ஏராளமான நடிகைகள் தளபதி விஜய் உடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என நினைத்து வரும் நிலையில் தமிழில் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்த இது இதற்கு பெரு அதிர்ஷ்டம் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாலிவுட் இன்னும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்பொழுது அமிதாப்பச்சனுடன் இணைந்து குட் பை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனவே அனைவரும் புரோமோஷன் பணிகளில்மிகவும் தீவிரமாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தில் இடம் பெற்றிருக்கும் சாமி பாடலுக்கு உடன் நடனமாடியுள்ளார் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.