சினிமாவில் முதன்முதலாக கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு தமிழ் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது வருகின்ற 17 ம் தேதி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு பழங்குடி பெண் வேடத்தில் நடித்துள்ளார். பொதுவாக நமது நடிகைக்கு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அது பக்காவாக பொருந்தும் என்பது தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் நமது நடிகை அல்லு அர்ஜுனுக்கு மிக பொருத்தமாக இருப்பது மட்டுமில்லாமல் அவருடைய நடிப்பும் இந்த திரைப்படத்தில் மிக சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அமிதாப்பச்சனுடன் குட்பை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறாராம் இவ்வாறு பல வயது முதியவருடன் இவர் இணைவதற்கு காரணமாக இந்த திரைப்படத்தில் எப்படி பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆசையாக இருந்து வருகிறார்கள்.
நடிகைகள் படப்பிடிப்பு முடிந்த கையோடு சுற்றுலா செல்வது வழக்கம் தான் அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பாரிஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளது மட்டுமில்லாமல் அங்கு பல புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.