விஜய் மீது வெறிதனமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா – ஆச்சரியத்தில் தளபதி ரசிகர்கள்.!

vijay--and-rashmika-
vijay--and-rashmika-

மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கண்டதால் தற்பொழுது மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் ரஷ்மிகா மந்தனாவுக்கு கிடைத்து வருகிறது.

தமிழில் கார்த்தியுடன் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயின்னாக நடித்தாலும் அவருக்கு பெரிய அளவு கதாபாத்திரம் இல்லாததால் இவரது பெயர் பெரிய அளவில் பேசப்படவில்லை இருப்பினும் நல்ல கதைக்காக காத்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் டாப் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருவதால் அதற்கு ஏற்றார்போல சம்பளத்தை உயர்த்திக் கொண்டு செம மாஸ் காட்டி வருகிறார். மேலும் டாப் நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் சற்று கிளாமர் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு படத்தில் சிறிதளவு கிளாமராக நடித்து அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து இவர் பிரஸ்மீட் மற்றும் போட்டோ ஷூட் என கிளாமரான வேடத்தில் அசத்துகிறார் இதனால் ரசிகர்கள் அவருக்கு கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளனர். சினிமா உலகில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பிடித்த ஹீரோ யார் என்று பார்த்தால் அவர் விஜய்தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த பேட்டி ஒன்றில் கூட நடிகை ராஷ்மிக மந்தனா. விஜயை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து ரசித்து வருகிறேன். அவர் மீதே வெறித்தனமாக இருக்கிறேன்  அவரை கல்யாணம் பண்ணிக்க கூட எனக்கு ஆசை தான் என கூறியுள்ளார்.