தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவருடன் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றிலை பெற்ற திரைப்படம் தான் பீஸ்ட்.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சென்டிமென்ட் படமாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக பட குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள். மேலும் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.
மேலும் முதல் முறையாக இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வாரிசு திரைப்படத்தில் இருந்து ஏராளமான வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியான நிலையில் இயக்குனர் வம்சி யாரும் தொலைபேசியை படப்பிடிக்கும் எடுத்து வரக்கூடாது என கட்டளை விதித்திருந்தார்.
ஆனால் இன்று நூறாவது நாள் படப்பிடிப்பு என்பதால் ராஷ்மிகா மந்தனா விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் எப்படி இருக்கிறார் என ஏற்கனவே வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ரசிகர்கள் தெரிந்து கொண்டார்கள்.
மேலும் தொடர்ந்து ஏராளமான அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 67ஆவது திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்.