தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழிலும் மிக பிஸியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது போதாதென்று தற்போது இந்தியிலும் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறாராம்
அந்தவகையில் நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் நடித்து வரும் புஸ்பா என்ற திரைப்படத்தில் நமது நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தை ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுகுமார் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.
மேலும் இத்திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையானது 280 கோடி என்பது தெரிய வந்து உள்ளது ஆகையால் இத்திரைப்படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுவது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் அவர்கள் நடிக்க உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப் போவதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் நமது நடிகை ராஷ்மிகா எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவர் என்ற திரைப்படத்தில் ஒரு விலைமாதுவாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன அந்தவகையில் இத்திரைப்படத்தில் இருந்து ஒரு போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது இத்திரைப்படத்தில் அவர் வெறும் உள்ளாடையுடன் இருப்பது ரசிகர்களை மெய்மறக்கச் செய்துள்ளது.
அந்த வகையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஒரு ஏழை வீட்டு பெண்ணாக நடித்து இருப்பார் போல தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக இந்த தொழிலை செய்து வருவதாக தெரிய வருகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.