தன்னையும் மற்றொரு நடிகரையும் சேர்த்து வந்த வதந்தி மிகவும் அழகாக இருப்பதாக கூறிய நடிகை ராஷ்மிகா மந்தானா.!

rashmika mandhana
rashmika mandhana

பொதுவாக தற்பொழுது எல்லாம் நடிகைகள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் மேலும் எந்த ரசிகர்களாக இருந்தாலும் எந்த நடிகைகளிடமும் பேச முடிகிறது மேலும் நடிகைகள் தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ரசிகர்களிடம் கலந்துரையாடுவது மற்றும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் தன்னையும் மற்ற நடிகரையும் சேர்த்து வெளிவந்த சர்ச்சைக்குரிய தகவல் வெளிவந்த நிலையில் வதந்தி மிகவும் அழகாக இருப்பதாக அவர் பதிவிட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தெலுங்கு திரைவுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இவ்வாறு இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்து பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழில் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ராஷ்மிகா வந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் தான் இவருக்கு பெரிதும் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முன்பு இவர் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டனுடன் இணைந்து கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் தான் ராஷ்மிகா ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் தனக்கென இடம் பிடித்தார் மேலும் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீதாராமம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார் மேலும் இவர் ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து மஜ்னு, அமிதாபக்க்ஷன் உடன் இணைந்து குட்பை, ரன்பீர் கபருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் நடிகை ராஷ்மிகா வந்தனாவும் விஜய் தேவர் கொண்டானும் காதலித்து வருகிறார்கள் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த ராஷ்மிகா’ இந்த வதந்திகள் மிகவும் அழகாக இருக்கின்றது’ என பதிலளித்துள்ளார்.