கன்னடப் பைங்கிளியான நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டார் அதனால் அங்கு தனக்கென ஒரு இடத்தையும் நிலையாக பிடித்தார் இப்பொழுது தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பட வாய்ப்பை கைப்பற்றிய நடித்து வருகிறார்.
இவர் கடைசியாக தெலுங்கு டாப் நடிகர் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார். புஷ்பா திரைப்படம் எதிர்பார்த்தது போல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது அதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் 66 வது திரைப் படத்திலும் இவர்தான் நடிக்க உள்ளார் என்ற தகவல் அண்மைகாலமாக பேசி வரப்பட்டது. அதேசமயம் விஜயின் 66 வது திரைப்படத்தில் வேறு சில நடிகைகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதால் யார் தான் நடிக்கப் போகிறார் என்பதே தெரியாமல் இருந்து வந்தது. ஒருவழியாக இப்பொழுது நடிகை ராஷ்மிகா மந்தனா தான் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிட்டத்தட்ட கிடைத்து உள்ளது
இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வளவு தான் பாக்கி. முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் கை கொடுத்து நடிக்க உள்ளார். இதற்கு முன்பு விஜய்யின் படத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா நிராகரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் முதன் முதலில் ராஷ்மிகா மந்தனா தான் நடிக்க வைக்க படக்குழு தேர்வு செய்து உள்ளது.
ஆனால் அப்போது ராஷ்மிகா மந்தனா மற்ற படங்களில் நடித்ததால் கால் சீட் கிடைக்காமல் போனதால் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்த வாய்ப்பை விடக்கூடாது என்பதற்காக தற்போது ரெடியாக இருந்தால் அதற்கேற்ற போலவே விஜய் 66 திரைப்படத்தில் கமீட்டாக உள்ளார் என்ற தகவல் வெளியாகின்றன.