actress ranjani latest photos : கிராமத்து கதைகளை வைத்து திரைப்படம் இயக்கி வெற்றி பெறுவது இயக்குனர் பாரதிராஜாவிற்கு கைவந்த கலை. அந்த அளவிற்கு அவருடைய பெருமை தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகின்றது. இவர் தமிழ் திரை உலகில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் அவர் இயக்கும் திரைப்படத்தில் நடிகைகளை வேறு கோணத்தில் பார்க்கும் அளவிற்கு கதையை உருவாக்குவார்.
இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகைகள் நடிப்பது மட்டுமல்லாமல் பட வாய்ப்புக்காக பல தொழில்களை செய்து வருவதாகவும் செய்திகள் பல சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வருகின்றன இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சினிமா துறைக்கு உதவ வேண்டும் என நடிகர் சங்கத்தில் ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி அதில் தங்களுடைய கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
அந்த குரூப்பில் பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் உள்ளார்கள் இதில் பிரபல நாடகக் கலைஞர் வாசுதேவன் அவர்கள் பாரதிராஜா படமான முதல் மரியாதை திரைப்படத்தில் அறிமுகமான ரஞ்சனியை பார்த்து நீங்கள் நடிகையா இல்லை வேறு தொழில் செய்பவரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதன் காரணமாக நடிகை ரஞ்சனி ஒரு நடிகையை இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல் சினிமா துறை வேறு நாடகத்துறை வேறு என சுட்டிக்காட்டி அவதூறாக பேசிய அந்த நபரின் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இவ்வாறு நடந்த சம்பவத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்தும் நடிகர் சங்கத்தில் இருந்தும் எந்த ஒரு பதிலும் இல்லாததால் நடிகை ரஞ்சனி கடும் கோபத்தில் உள்ளார்.
நடிகை ரஞ்சனி பிரபல அரசியல் கட்சியில் இருந்து வெளியேறி தற்போது மகளிர் ஆணையத்தில் பணியாற்றி வருவது மட்டுமல்லாமல் தற்போது கேரளாவில் உள்ள அம்மா சங்கத்தில் பணியாற்றி வந்தார் இதன் பிறகு மஞ்சு வாரியர் தலைமையில் சினிமா பெண்கள் கூட்டுக்குழுவில் இவரும் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார்.
இவ்வாறு முதல் மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் திரும்பி பார்க்க வைத்த நமது நடிகை தற்போது எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்.