சில நிமிட காட்சிகளிலேயே நடித்து ரசிகர்களை மடக்கி போட்ட நாட்டாமை டீச்சர் நடித்த 5 படங்கள்

Rani
Rani

குணச்சித்திர நடிககள் சரியான நேரத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அவரை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் அப்படியே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டவர் நடிகை ராணி இவரை ரக்சா எனவும் அழைக்கின்றனர். இவர் தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அப்படி இவர் நடித்த 5 படங்கள் காலம் கடந்த பிறகும் பேசப்பட்டு வருகிறது.

நாட்டாமை : கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் ராணி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இவர் வரும் சீன் சற்று கிளாமராகவே இருந்தாலும் அது ரசிக்கும்படி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனது. இன்றும் அதைப் பற்றி பேசி வருகின்றனர்.

நித்யா மேனன் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் இதுதான்.! பகீர் கிளப்பிய பயில்வான்

ஜெமினி :  விக்ரம், கிரண் நடிப்பில் வெளியான இந்த படத்தில் ராணி ஓ போடு பாடலுக்கு சற்று கிளாமராக ஆடி அந்த பாடலை வெற்றி பெற செய்தார். இந்த பாடல் இப்பொழுதும் ரசிகர்களுக்கு பேமஸான பாடலாக இருக்கிறது.

காதல் கோட்டை : அஜித் நடிப்பில் அகத்தியன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் தேவயானி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் வரும் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடலில் நடன இயக்குனர் ராம்ஜி உடன்  ராணி ஆடி இருப்பார் அந்த பாடல்  அப்பொழுது பெரிய அளவில் ஹிட் அடித்தது இப்பொழுதுமே பலருக்கும் பிடித்த பாடலாக இருந்து வருகிறது.

உன் மேல நம்பிக்கை இல்ல.. காஷ்மீர் ஷூட்டிங்கில் சத்தியம் வாங்கிய விஜய் – மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்

வில்லுப்பாட்டுக்காரன் : ராணி தமிழில் ஹீரோயின்னாக முதலில் நடித்த திரைப்படம் தான் இது. ராமராஜனுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். படம் வெளிவந்து வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கலைவாணியோ என்னும் பாடல் இப்பொழுதும் பலருக்கும் பிடித்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

வர்ணஜாலம்  : ஸ்ரீகாந்த், சதா, குட்டி ராதிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன், ரியாஸ் கான், நிழல் ரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராணி நடித்து அசத்தியிருப்பார்.