தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன் இவர் சமீபத்தில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது கிராமத்து கதாபாத்திரம் கொண்ட திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது மட்டுமல்லாமல் பல்வேறு எமோஷனல் காட்சிகள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றதன் காரணமாக ரசிகர்கள் இத்திரைப்படத்தை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இவ்வாறு இத்திரைப்படத்தை பற்றி ரம்யா பாண்டியனிடம் கேள்வி கேட்ட போது இந்த திரைப்படத்தில் ஒரு நீண்ட வசனம் இடம் பெற்றிருந்தது அதனை நான் பேசுவதற்கு மிகவும் கஷ்டப்பட்ட தாகவும் அதனை சென்சார் ரிப்போர்ட் அந்த வசனத்தை நீக்கி விட்டதாகவும் கூறி உள்ளார்.
ஏனெனில் இந்த வசனம் ஆனது நேரடியாக அரசியலை விமர்சிக்கும் வகையில் இருந்ததன் காரணமாக தான் அந்த வசனத்தை திரைப்படத்தில் இருந்து தூக்கி விட்டார்கள். மேலும் விஜய் அஜித் பற்றி ஒரே வரியில் நீங்கள் சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்லுவீர்கள் என்று அவரிடம் கேட்டு உள்ளார்கள்.
அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் தளபதி விஜயை நான் சிறு வயதிலிருந்தே பார்த்துள்ளேன் எப்பொழுதும் இளமையாகவே இருந்து வருகிறார் அதேபோல தல அஜித்தை என்னுடைய குடும்ப விழா ஒன்றில் பார்த்துள்ளேன் அவர் அனைவருக்குமே நின்று நிதானமாக மரியாதை கொடுப்பார்.
அந்தவகையில் ஒரே வரியில் சொல்லப்போனால் தளபதி யங் தல கிங் என ரம்யா பாண்டியன் கூறியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் தல தளபதி ரசிகர்கள் இடையே இந்த கருத்து சண்டையை தூண்டி விட்டுள்ளது.