பல லட்சங்களை சம்பாதிக்கும் ரம்யா பாண்டியன்.!! படத்தின் மூலம் இல்லைங்கோ இது வேற.

ramya-pandiyan2
ramya-pandiyan2

நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வருவதற்கு முன்பே டம்மி பட்டாசு, ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலமாகவில்லை.

அதனாலேயே மொட்டை மாடியில் இடுப்பு தெரியும்படி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் தனது புகைப்படத்தை பதிவிட்டு பிரபலம் அடைந்தார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி  முதல் சீசனில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் அந்த ஷோவில் இவர் ரன்னராகவும் ஆனார்.

அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோவில் நடுவராக பணிபுரிந்து வந்தார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு படவாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் லட்சம் லட்சமாக சம்பாதித்தும் வருகிறார். அதாவது இவரை பேட்டி எடுக்க வேண்டும் என்றாலும் அல்லது இவரது சமூக வலைத்தளத்தில் பொருட்களை விளம்பரம் செய்ய வேண்டுமென்றாலும் பல லட்சங்களை தீட்டி விடுகிறாராம். எனவே இவரைப்போலவே பல நடிகைகளும் இந்த ஐடியா சிறப்பாக உள்ளது என பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.