தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் திடீரென்று மொட்டை மாடியில் தன்னுடைய இடுப்பழகு தெரியும்படியான எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட அது ஒரே இரவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு ஃபேமஸாக மாறியவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
மேலும் இவரை குஷி ஜோதிகா என்றும் அழைத்து வருகிறார்கள் ஒரே நைட்டில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக மாறிய இவருக்கு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் இன்னும் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இன்னும் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் இறுதிவரை சென்றார். இவ்வாறு தற்பொழுது இந்நிகழ்ச்சிற்க்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்ற வரும் இவர் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக அசத்தியிருந்தார் மேலும் இடும்பன்காரி உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் மேலும் இவர் இதன் மூலம் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் தங்களுடைய பெரிய ஆதரவை கொடுத்து இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது புடவை, கிளாமர் உடை என மாறி மாறி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சுடிதாரில் மிகவும் அழகாக ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு இருக்கும் இவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.