தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சிறப்பான படங்களில் நடித்த ரம்யாபாண்டியன். தனது திறமையை வெளிக் காட்டினாலும் பெரும்பாலும் அவரது பெயர் வெளிவரவில்லை. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர மொட்டைமாடியில் இடுப்பு தெரியும் அளவிற்கு போட்டோ ஷுட் நடத்தினார் அதன்மூலம் லச்சக்கணக்கான ரசிகர்களை குவித்தார்.
பின்பு இவருக்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கன்டஸ்டன் ஆக பங்கு பெற்றார். அந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் மற்றும் புகழின் காம்போ மக்கள் அனைவராலும் பெரிதும் பேசப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரம்யா பாண்டியன் பெரிதும் பிரபலம் அடைந்தனர்.
பின்பு அவருக்கு அதே தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு சீசன் 9 யில் ஜாட்ஜ் ஆக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே அவருக்கு பிக் பாஸ் சீசன் 4 க்கு அழைப்பு வந்தது. அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து பாதியிலே விலகி பிக் பாஸ் சென்றார். பிக்பாஸில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் ஆரி உடனான கருத்து வேறுபாட்டால் ஆரி ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தனர்.
இருந்தாலும் அவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தன. பின்பு ரம்யா பாண்டியன் வெளிவந்த பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தனர். அதில் நடிகர் சூர்யா தயாரிப்பில் கமிட்டான படம் தான் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இப்படம் நிறைவுபெற்று.
அமேசான் பிரைம் யில் நேற்று (செப்டம்பர் 24)யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் நில நிற ஸ்லீவ்லெஸ் உடையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியனின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.